தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டக்கல்லூரி கலந்தாய்வில் மகனுக்குப் பதிலாக பங்கேற்கவுள்ள தந்தை! - உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் - law councealsing

மதுரை: டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மூன்றாண்டு சட்டப்படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வில் மதுரை மத்திய சிறையில் உள்ள மகனுக்குப் பதிலாக தந்தை பங்கேற்க சென்னை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai hc

By

Published : Sep 24, 2019, 10:29 AM IST

திருச்சியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கணேசன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், "எனது மகன் கார்த்திகேயன் இளங்கலை கணினி அறிவியல் முடித்துள்ளார். அதன்பின்பு மூன்று ஆண்டு சவுதி அரேபியாவில் வேலை பார்த்துவிட்டு தற்போது இந்தியா வந்துள்ளார்.

இவர் சட்டம் படிக்க விரும்பி சட்ட படிப்பிற்காக டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்திருந்தார். இடைப்பட்ட நேரத்தில் இவரது நண்பர் சசிகுமார், அவரது உரிமையாளர் தனசேகரன் ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது.

கப்பலூர் சுங்கச்சாவடியில் பணம் வசூலிப்பதில் தனசேகரன் தரப்பிற்கும் சுங்கச்சாவடி நபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இத்தகராறு முற்றியநிலையில் தனசேகரனுடன் வந்த ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுத் தொடர்பாக திருமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

எனது மகன் கார்த்திகேயன் கடந்த 17ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்தார். தற்பொழுது மதுரை மத்திய சிறையில் உள்ள நிலையில், இவருக்கு மூன்றாண்டு சட்டப் படிப்பிற்கு கலந்தாய்வில் பங்கேற்பதற்காக அனுமதி சீட்டு வந்துள்ளது. எனவே எனது மகன் சார்பில் என்னை உரிய ஆவணங்களுடன் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி எம். சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விண்ணப்பதாரர் சார்பில் அவரது தந்தையை சட்டப்படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதையும் பார்க்க:மொழி சிறுபான்மை பள்ளிகளில் தமிழ் தேர்வு எழுத 3ஆண்டு விலக்கு- உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details