மதுரை:பவுன்ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அதில், "மதுரை விராட்டிபத்து பகுதியில் நத்தம் புறம்போக்கு இடத்தில் பல வருடங்களாக வசித்து வருவதாகவும். தற்போது, அரசு அதிகாரிகள் அதனை நீர் நிலை ஆக்கிரமிப்பு எனக் கூறி வீட்டை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும், பொதுப் பணி துறையினர் ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதற்குத் தடை விதித்து எங்களுக்குப் பட்டா வழங்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், மனுதார் புதுக்குளம் கண்மாய் நீர் நிலையை ஆக்கிரமித்து தற்காலிக செட் அமைத்து உள்ளார். அதற்குப் பட்டா வேண்டும் எனக் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல எனக் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "நீர் நிலையை ஆக்கிரமிப்பு செய்து அதற்குப் பட்டா வேண்டும் எனக் கூறுவது ஏற்கத்தக்கதல்ல.