மதுரைமாநகராட்சியில் 2006 முதல் 2007 வரை தினக்கூலி அடிப்படையில் தூய்மைப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டவர்களில் 309 பேர் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி 2010-ல் தொழிலாளர் ஆய்வாளர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த தொழிலாளர் ஆய்வாளர் 309 பேரையும் பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மாநகராட்சி சார்பிலும், தொழிலாளர் ஆய்வாளர் உத்தரவை அமல்படுத்தக்கோரி தூய்மை பணியாளர்கள் சார்பிலும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, மாநகராட்சி மனுக்களைத் தள்ளுபடி செய்தும், தூய்மை பணியாளர்களின் மனுக்களை ஏற்று அவர்களைப் பணி நிரந்தரம் செய்யவும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை மாநகராட்சி ஆணையர் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்தார். இதனிடையே, இந்த வழக்கை நேற்று (ஏப்ரல்.22) நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், "மத்திய, மாநில அரசுகள் தங்களை மக்கள் நல அரசுகள் என சொல்லி வருகின்றன.