சிவகங்கையைச் சேர்ந்த 55 வயது பெண் ஒருவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "கணவரை இழந்த நான், ஆடு மேய்க்கும் தொழிலை செய்துவருகிறேன். எனது இரண்டாவது மகள் (26) வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர். அதனால் அவரை நான் வீட்டைவிட்டு வெளியில் அனுப்புவதில்லை. நான் காலையில் ஆடு மேய்க்கச் சென்றால், மாலையில்தான் வீடு திரும்புவேன்.
இதைப் பயன்படுத்திக் கொண்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்த காசி என்பவர் எனது மகளைப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதுகுறித்து அளித்த புகாரின் படி, சிவகங்கை மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரைச் சிறையில் அடைத்தனர். தற்போது, என் மகள் 24 வாரக் கருவைச் சுமந்துகொண்டிருக்கிறார். மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் என் மகள் குழந்தை பெற்றுக்கொள்வதென்பது இயலாது. எனவே, அவரது வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்றார்.