தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உயர் அழுத்த மின் வழிப்பாதை பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு - வைக்க வேண்டும்

மதுரை: கரூர் அரவக்குறிச்சியில் நடைபெற்று வரும் உயர் அழுத்த மின் வழிப்பாதை அமைக்கும் பணி 50 விழுக்காடுக்கு கீழ் நடைபெற்றிருந்தால் திட்டப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை

By

Published : Apr 26, 2019, 8:36 AM IST

கரூர் அரவக்குறிச்சி கோடந்தூரைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவர் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், ’திருப்பூர் மாவட்டம் புதிய புகழூரிலிருந்து பழைய புகழூர் (பரமத்தி) வரையும், புதிய புகழூரிலிருந்து திருவலம் வரையும் விளை நிலங்கள் வழியாக அமைக்கப்படும். உயர் மின் கோபுரங்களக்கு உரிய அனுமதியை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் பெறவில்லை.

எனவே, மத்திய மின் தொகுப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின்வாரியத்துக்கு மத்திய மின்வாரிய ஆணையம் அளித்துவந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும்’ என கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, இரு வழித்தடத்திலும் 50 விழுக்காடுக்கு மேல் திட்டப் பணிகள் முடிந்திருந்தால் திட்டப்பணியை தொடரலாம் எனவும், 50 விழுக்காடுக்கு கீழ் குறைவாக பணிகள் நடைபெற்றிருந்தால் திட்டப்பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், உயர் மின் கோபுரங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், மாற்று வழியில் திட்டப்பணிகளை செயல்படுத்துவது குறித்தும் மத்திய, மாநில அரசுகளும், மத்திய மின் தொகுப்பு கழகமும் பதிலளிக்க நேரம் ஒதுக்கி அடுத்தக்கட்ட விசாரணையை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details