மதுரை:மதுரையைச் சேர்ந்த பொழிலன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை, மாட்டுத்தாவணியில் காய்கறி சந்தை மற்றும் மலர் சந்தை என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. காய்கறி சந்தையில் 1000க்கும் மேற்பட்ட மொத்த வியாபார கடையும் சில்லறை வியாபார கடையும் உள்ளது. இங்குப் பல்லாயிரக் கணக்கான மக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.
இதே போல மலர் சந்தையில் 100க்கும் மேற்பட்ட கடைகள் 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் தினசரி 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய இடமாகத் திகழ்கிறது. திருவிழா காலங்களில் அதிகப்படியான பொதுமக்களும் வந்து செல்கின்றன.
ஆனால், மாட்டுத்தாவணி இரண்டு சந்தைகளிலும் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை குறிப்பாகக் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளும், வாகன நிறுத்தம் செய்வதற்கான இட வசதிகள் இல்லை. இதனால் அங்கு வரக்கூடிய பொதுமக்கள் மற்றும் பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு விதமான சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இதையும் படிங்க:"ஏசி பஸ் ஸ்டாபில் கருணாநிதி போட்டோவை பெருசா வையுங்க" - தர்ணாவில் ஈடுபட்ட திமுக நபர்.. தருமபுரியில் நடந்த்து என்ன?