தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"நெல் கிடங்கி அமைத்து தரக் கோரி வழக்கு"- தமிழ்நாடு அரசு பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு - மதுரை மாவட்ட செய்திகள்

அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பு தொடர்பாக, தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து விளக்கம் அளிக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றக்கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

"நெல் கிடங்கி அமைத்து தரக் கோரி வழக்கு"- தமிழ்நாடு அரசு பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
"நெல் கிடங்கி அமைத்து தரக் கோரி வழக்கு"- தமிழ்நாடு அரசு பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

By

Published : Feb 16, 2023, 10:34 PM IST

மதுரை:அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாக்க நெல் கிடங்கி அமைத்து தரக் கோரி மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தார். தாக்கல் செய்த மனுவில்,"தற்போது பருவமழை நன்றாக பொய்த்தால் தமிழ்நாட்டில் நன்றாக நெல் விளைச்சல் விளைந்துள்ளது. தற்போது, அறுவடைக்காக விவசாயிகள் தயார் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அறுவடை செய்யக்கூடிய நெல் மூட்டைகள் அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் நெல் மூட்டைகளை பாதுகாப்பதற்காக நெல் கிடங்கி போதிய பாதுகாப்பு மையம் இல்லை. இதனால் விவசாயிகள் மிகுந்த சிரமம் கொடுத்து விளைவிக்கக்கூடிய நெல் மணிகள் வெயிலிலும், மழையிலும் நனைந்து வீணாகி விடுகின்றன. மேலும், இதனால் விவசாயிகளுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுகிறது.

எனவே, மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் தாலுகாவில் நெல் கிடங்கி பாதுகாப்பு மையம் அமைக்க உத்தரவிட கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளேன். அதற்கு அதிகாரிகளிடம் இருந்து எந்தவித நடவடிக்கையும் இல்லை எனவே, மதுரை உயர் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்'' என மனு தாக்கல் செய்திருந்தார்.

"நெல் கிடங்கி அமைத்து தரக் கோரி வழக்கு"- தமிழ்நாடு அரசு பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விக்டோரியா கௌரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதிகள் நெல் மூட்டைகள் பல்வேறு மாவட்டங்களில் மழையில் நனைவதே செய்தி ஊடகங்களில் பார்க்க முடிகிறது. மேலும், இதுகுறித்து அரசு தரப்பில் உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க:"அனைத்து சிவாலயங்களிலும் மகா சிவராத்திரியை சிறப்பாக கொண்டாட வேண்டும்" - இந்து சமய அறநிலையத்துறை!

ABOUT THE AUTHOR

...view details