மதுரை: கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தனசேகரன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "கரூர் அமராவதி ஆற்றை சுற்றிலும் 5 கிலோ மீட்டர் தொலைவில் சாயப்பட்டறை தொழிற்சாலைகள் கட்டுவதற்கு, இயங்குவதற்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் திருப்பூரைச் சேர்ந்த தனியார் துணி நிறுவனம் அமராவதி ஆற்றின் அருகே சாயப்பட்டறை அமைத்து அதன் கழிவுகளை அமராவதி ஆற்றில் கலந்து வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் அரசு உத்தரவிற்கு மாறாக சட்டவிரோதமாக அனுமதி பெறப்பட்டுள்ளது.
எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு நகரமைப்பு துறை இயக்குனருக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சட்ட விரோதமாக அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டுமானங்களை இடித்து அப்புறப்படுத்த உத்தரவிடக் கோரி" மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.