தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'11ஆம் வகுப்பு மாணவனின் விடைத்தாள் நகலை வழங்க வேண்டும்' - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை!

மதுரை: 11ஆம் வகுப்பு மாணவனின் பொருளாதார பாடத் திட்டத்தின் விடைத்தாள் நகலை கொடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

hc
c

By

Published : Oct 21, 2020, 8:58 PM IST

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், "எனது மகன் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் நடந்த இறுதி தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 506 மதிப்பெண்கள் பெற்றார். ஆனால் பொருளாதார பாடத்தில் மட்டும் 55 மதிப்பெண்கள் கிடைத்தது. எனவே, எனது மகனின் பொருளாதார வினாத்தாளை வழங்குமாறு பள்ளிக்கல்வித்துறையிடம் மனு அளித்திருந்தேன். ஆனால், அவர்கள் வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர். எனது மகனின் விடைத்தாள் நகலை வழங்கிட உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி வைத்தியநாதன் அமர்வில் இன்று (அக்டோபர் 21) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, "நன்றாக படிக்க கூடிய இந்த மாணவர் அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளார். ஆனால், பொருளாதாரத்தில் மட்டும் மதிப்பெண் குறைந்ததால் அந்த பாடத்திற்கான விடைத்தாளின் நகல்களை கேட்டுள்ளனர். இதில் எந்த தவறும் இல்லை. விடைத்தாள் பதிவேற்றம் செய்ததில் தகவல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய முடியவில்லை எனக் கூறப்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கான நூற்றாண்டில் இருக்கிறோம்.

பெரும்பாலான பணிகள் தொழில்நுட்ப வளர்ச்சியை சார்ந்துள்ளன. குறிப்பாக இந்த காலத்தில் நீதிமன்ற பணிகள் அனைத்தும் காணொலியில் தான் நடக்கின்றன. எனவே மனுதாரருக்கு நகல் வழங்க மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, இன்னும் பத்து நாட்களுக்குள் மனுதாரரின் மகனின் பொருளாதார பாடத்திற்கான விடைத்தாளின் நகலை வழங்க வேண்டும். அந்த நகலின் அடிப்படையில் மறுமதிப்பீடு செய்யும் பணியை ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும். அதிகபட்சமாக டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக்க வேண்டும்" என தீர்ப்பளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details