மதுரை: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகத் திகழும் தாமிரபரணி ஆற்றினை பெயர் மாற்றக் கோரி, தூத்துகுடியைச் சேர்ந்த பொன்காந்திமதி நாதன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், 'அதில் பொதிகை மலையில் உற்பத்தியாகி, நெல்லை மாவட்டம் வழியாக மன்னார் வளைகுடா கடலில் கலப்பது, தாமிரபரணி ஆறு. தாமிரபரணி என்பது வடமொழிச் சொல். தாமிரபரணி ஆறு முன்னதாக 'பொருநை நதி' எனும் தமிழ்ப்பெயரால் வழங்கப்பட்டுள்ளது.
திருவிளையாடல் புராணம், மங்கல நிகண்டு, முக்கூடற்பள்ளு, பெரிய புராணம் என பல தமிழ் இலக்கியங்களில் பொருநை நதி எனும் பெயரே வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு அகழ்வாராய்ச்சியாளர்களும், தமிழறிஞர்களும் இதனை உறுதி செய்துள்ளனர்.