தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாழ்த்தப்பட்டவரின் உடலை எப்படி எடுத்துச் செல்ல வேண்டும்? நீதிமன்றம் தீர்ப்பு - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இறந்தவரின் உடலை, பொதுபாதை வழியாக எடுத்துச் செல்வதற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

By

Published : Nov 22, 2019, 9:42 PM IST

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘நான் ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவன். எனது உறவினர் நவம்பர் 20ஆம் தேதி உயிரிழந்த நிலையில், அவரது உடலை அடக்கம் செய்வதற்காக அகரம் ஜோதிபுரம் பிரதான சாலை பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்ல மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்ல இயலாத நிலை உள்ளது. மணலூர் கிராமத்தில் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவர்கள் பொதுப் பாதையை பயன்படுத்துவதில், முன்னாள் ஒன்றிய தலைவர் பாலசுப்பிரமணியன், கிழக்குத் தெரு முருகேசன், கீழத்தெருவில் மகாதேவன் ஆகியோர் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி அலுவலர்களிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, இறந்தவர் உடலை, மணலூர் கிராமத்தில் உள்ள பொது மயானத்திற்கு அகரம் ஜோதிபுரம் வழியாக எடுத்துச் செல்வதற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கவும், நல்ல முறையில் உடல் தகனம் செய்யப்படுவதை உறுதிப்படுத்த காவல் துறையினருக்கும் உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், அப்போது பிரச்சினைக்குரிய பொதுபாதை வழியாக உடலை எடுத்துச்செல்ல மறுப்பு தெரிவித்த நீதிபதி, உடலை மேல தெரு வழியாக மயானத்திற்கு கொண்டு செல்ல அனுமதி அளித்தும், ஏற்கனவே இது சம்பத்தமாக நிலுவையில் உள்ள பொதுநல வழக்குடன் இந்த மனுவை இணைத்து பட்டியலிடவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: அரசின் கொள்கைரீதியான முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது!

ABOUT THE AUTHOR

...view details