மதுரை: திருமங்கலத்தைச் சேர்ந்த வெற்றிவேல் உயர் நீதிமன்ற மதுரைக் கிளைகள் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், மதுரை மாவட்டம் திருமங்கலம் கிராமத்தில் மேற்பட்ட SC/ST வகுப்பைச் சார்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள்.
இந்தப் பகுதியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆதிதிராவிடர்களுக்காக இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.நத்தம் பகுதி 1994 ஆண்டு SC/ST அரசாணையின் படி 4 வகைகளாகப் பிரித்து 1.30 ஏக்கர் இலவச குடியிருப்பு மனைகளாகவும், 0.65 ஏக்கர் சாலைப் பகுதியாகவும், 0.33 அங்கு இருக்கும் மக்களின் பிற தேவைக்காகவும், 1.09 ஏக்கர் வருங்கால இலவச பட்டா தேவைக்காக ஒதுக்கி வைக்கப்பட்டது. மேலும் அரசாணையின்படி எஸ்.பி நத்தம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர்களுக்கு மட்டுமே இலவச பட்டா ஒதுக்கப்பட வேண்டும் என உள்ளது.
1.09 ஏக்கர் வருங்கால தேவைக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட இடத்தில் எஸ்.பி நத்தம் கிராமத்தைச் சேர்ந்த 65 நபர்கள் இலவச வீட்டு மனை பட்டாவிற்காக விண்ணப்பித்து இருந்தோம். ஆனால் எங்கள் கிராமத்தின் அருகே உள்ள எஸ்.பெருமாள்பட்டி மற்றும் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பலருக்கும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 முதல் 3 நபருக்கும் இங்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.