ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
ராஜ ராஜ சோழன் நினைவிடத்தில் ஆய்வு; அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு! - RAJARAJACHOZHAN
மதுரை: ராஜ ராஜ சோழனின் நினைவிடத்தில் தொல்லியல் துறை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
அப்போது, உயர்நீதிமன்றம் உத்தரவின் படி அரசு தரப்பில் இரண்டு நாட்கள் உடையாளூர் பகுதியில் அமைந்துள்ள ராஜ ராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தொல்லியல் துறை சார்பாக நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வு முடிவுகள் அனைத்து சோதனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், ராஜ ராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடந்த ஆய்வின் முடிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.