தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தான்குளம் காவல் உயர் அலுவலர்கள் மீது அவமதிப்பு வழக்கு - மதுரை மாவட்ட செய்திகள்

துத்துக்குடி: சாத்தான்குளம் காவல் துறை உயர் அலுவலர்கள் மீது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது.

madurai high Court News
madurai high Court News

By

Published : Jun 30, 2020, 10:24 AM IST

தூத்துக்குடி நீதித்துறை நடுவரின் மின்னஞ்சல் தகவலின் அடிப்படையில், காவல் கூடுதல் கண்காணிப்பாளர் குமார், காவல் துணை கண்காணிப்பாளர் பிரதாபன், சாத்தான்குளம் காவலர் மகராஜன் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைக்காததுடன், தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் எழுந்தது.

இதனையடுத்து, குமார், பிரதாபன், மகராஜன் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.

மேலும் இந்த மூன்று பேரும் இன்று (ஜூன் 30) காலை 10.30 மணிக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நேரில் முன்னிலையாக நீதிபதிகள் பி.என். பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details