தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹைடெக் முறையில் தீர்வுகாணவே விரும்புகிறோம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் - undefined

மதுரை: ஹைடெக் முறையில் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தீர்வு காணவே விரும்புகிறோம். மனு தாக்கல் செய்யும் போது வழக்கில் தொடர்புடையவர்களின் தொலைபேசி எண், இமெயில் முகவரி உள்ளிட்ட விபரங்களை தெரியப்படுத்தவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

By

Published : Jun 4, 2020, 5:13 AM IST

மதுரை மாவட்டம் நரசிங்கம்பட்டி குரூப் வெள்ளரிக் கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி தவமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தனர். அரசுத் தரப்பில் போதுமான விபரங்களை பெற்று வைத்திருந்தால், சம்பந்தப்பட்டவர்களை வாட்ஸ்அப் வீடியோவில் தொடர்பு கொண்டு பேசி தீர்வு காணலாம். இதற்கு மனுதாரர் மற்றும் அரசுத் தரப்பில் போதுமான விபரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றனர்.

இதன்பின், மேலூர் தாசில்தாரை செல்போனில் தொடர்பு கொண்டனர். உடனடியாக தொடர்புக்கு வந்த தாசில்தார், தனது செல்போனில் வாட்ஸ்ஆப் வசதி இல்லை. நீதிபதிகளுடன் செல்போனில் பேசுவது பயமாக உள்ளது என்றார்.

அப்போது நீதிபதிகள், அலுவலர்களின் செல்போனில் வாட்ஸ்அப் வசதி இருக்க வேண்டும். அப்போது பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண முடியும். மடியில் கனமிருந்தால் தான் பயம் இருக்கும். அலுவலர்கள் பயமின்றி பணியாற்றவேண்டும் என்றனர். பின்னர், மனு குறித்து தாசில்தார் தரப்பிலிருந்து இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.

இதேபோல், திருவில்லிபுத்தூர் வழக்கறிஞர் சங்க செயலாளர் தரப்பில், வழக்கறிஞர் ஒருவர் மீது நடவடிக்கை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை வாட்ஸ்அப் வீடியோவில் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது அவரது விளக்கத்தை கேட்ட நீதிபதிகள், அவர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

இதையடுத்து நீதிபதிகள், “ஹைடெக் முறையில் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தீர்வு காணவே விரும்புகிறோம். மனு தாக்கல் செய்யும் போது வழக்கில் தொடர்புடையவர்களின் தொலைபேசி எண், இமெயில் முகவரி உள்ளிட்ட விபரங்களை தெரியப்படுத்தவேண்டும். அரசுத் தரப்பில் ஆட்சியர்கள், தாசில்தார் உள்ளிட்ட அனைத்து நிலை அலுவலர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோரின் விபரத்தையும் பெற்று தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேவையான நேரம் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம். சம்பந்தப்பட்டவர்கள் தேவையின்றி நீதிமன்றத்திற்கு வருவதும் தவிர்க்கப்படும். நீதிமன்றத்தின் நேரமும் வீணாகாது“ என்றனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details