மதுரை:தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா லட்சுமி நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் சோலையம்மாள். இவர், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “எங்கள் பகுதியில் உள்ள மந்திகுளத்தில் என் கணவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்திற்குச் செல்வதற்கு வண்டி பாதை உள்ளது. பல ஆண்டுகளாக இந்தப் பாதையை பயன்படுத்தி எங்கள் விவசாய நிலத்திற்குச் சென்று விவசாயம் செய்து வருகிறோம்.
எங்களைப் போல இந்த பகுதியில் 40க்கும் மேற்பட்டவர்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களில் விவசாயம் செய்வதற்கு வண்டி பாதையை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த பகுதியில் காற்றாலை அமைக்க தனியார் நிறுவனம் முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக வண்டிப் பாதையை அழித்துவிட்டு புதிதாக சாலை அமைப்பது தொடர்பாக இந்த தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சார்பில் நில அளவீடு செய்ய நான் உள்பட 41 பேருக்கு வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.