மதுரை:தூத்துக்குடி பாஜக மாவட்டச் செயலாளர் சித்ரங்கநாதன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், “திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா 2022 அக்டோபர் 25 முதல் 2022 அக்டோபர் 30ஆம் தேதி வரை நடைபெறும்.
அக்டோபர் 30ஆம் தேதி சூரசம்கார நிகழ்ச்சி நடைபெறும். திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள் பிரகாரத்தில் தங்கி விரதம் இருப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள் பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கவில்லை.
காலம் காலமாக நடைபெறும் வழிமுறைகளை மாற்றுவது ஏற்கத்தக்கதல்ல. எனவே திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள் பிரகாரத்தில் கந்த சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
இம்மனு இன்று (அக் 27) உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “திருச்செந்தூர் முருகன் கோயில் முழுவதுமாக தனியார் கையில் உள்ளது.
திருப்பதி கோயில்களில் இதேபோன்று உள்ளே சென்று விரதம் இருக்க முடியுமா? தமிழ்நாட்டிலுள்ள கோயில்கள் மட்டும் சத்திரமா? இந்த முறையை மாற்றி அமைக்க வேண்டும். திருச்செந்தூர் முருகன் கோயிலில் பணம் கொடுத்தால் உடனடியாக சாமி தரிசனம் செய்ய முடியும். கோயில் பணக்காரர்களுக்கானது கிடையாது.