மதுரை:தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த லிங்கராஜ் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல்செய்திருந்தார்.
அதில், "2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஐந்து சவரன் விவசாய நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் 2021 நவம்பர் 1ஆம் தேதி 5 சவரன் விவசாய நகைக் கடன் தள்ளுபடி தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டது. இது அரசுக்குக் கூடுதல் சுமையாகவே அமையும்.
கூட்டுறவு வங்கிகளில் நகையை அடகு வைத்தவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அனைத்து ஊர்களிலும் கூட்டுறவு வங்கி இல்லாததால், பலர் பொதுத் துறை வங்கிகளிலேயே நகையை அடகுவைத்துள்ளனர்.