தஞ்சாவூரைச் சேர்ந்த கிளான் தினேஷ் குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதில், கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி எழுதிய ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி என்ற நிலையில், 81 மதிப்பெண்கள் பெற்றேன். அத்தேர்வில் கேள்வி எண் 132இல் (C TYPE) "வந்தே மாதரம்" என்ற பாடல் முதன் முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டது என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. நான் சரியாக வங்க மொழியில் எழுதப்பட்டது என பதிலளித்தும், தேர்வு வாரியம் மதிப்பெண் வழங்கவில்லை. ஆனால், தேர்வு வாரியம் இதே கேள்விக்கு சமஸ்கிருதம் என தவறாக பதிலளித்தவர்களுக்கு மதிப்பெண் வழங்கியுள்ளது.
சட்டப்போராட்டம் நடத்தி ஒரு மதிப்பெண் பெற்ற பட்டதாரி - உத்தரவிட்ட நீதிமன்றம்! - மதுரை
மதுரை: ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர் ஒரு மதிப்பெண் கோரி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மனுதாரருக்கு ஒரு மதிப்பெண் வழங்க உத்தரவிட்டது.
இந்த தவறான விடையால், நான் ஆசிரியர் தகுதித் தேர்வில், இந்த ஒரு மதிப்பெண்ணால் தேர்ச்சி பெறாமல் உள்ளேன். இதே போல் சரியாக எழுதிய பலர், உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி மதிப்பெண் பெற்றுள்ளனர். எனவே சரியான பதில் எழுதிய எனக்கு ஒரு மதிப்பெண் வழங்கவும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் கிளான் தினேஷ் குமாருக்கு ஒரு மதிப்பெண் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டார். மேலும், மனுதாரர் இதனால் வேலை வாய்ப்பு கோர முடியாது. ஆனால், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிக்கப்படும் எனவும் உத்தரவிட்டார்.