மதுரை: திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் நாகர்கோவில் தொடங்கப்பட்ட எஸ்.எல்.பி. பெண்கள் பள்ளியின் மைதானத்தில் குழந்தைகள் நல காப்பகம் மற்றும் குழந்தைகள் நல அலுவலகம் கட்டுவதற்குத் தடை கோரி தொடரப்பட்ட வழக்கு மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் விசாரணைக்கு வந்தது.
பள்ளி மைதானத்தில் குழந்தைகள் நல காப்பகம் அவசியமா? - நீதிபதிகள் கேள்வி - trivancore samsthan
பள்ளி வளாகத்தில் குழந்தை நல காப்பகம் அமைக்கத்தடை கோரிய வழக்கில் வேறு இடங்களில் காப்பகம் அமைக்கக் கூடாதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மதுரை உயர்நீதிமன்றக் கிளை
மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண அமர்வு, பள்ளி வளாகத்தைத் தவிர்த்து வேறு இடங்களில் குழந்தைகள் நல காப்பகம், குழந்தைகள் நல அலுவலகம் அமைக்கக் கூடாதா என கேள்வி எழுப்பினர். மேலும் வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்கக்கோரி விசாரணையினை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:ஆணாக மாறி மாணவியை மணந்த ஆசிரியை.. இப்படியும் ஒரு காதலா?