தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் - சிபிஐ நிலை அறிக்கை தாக்கல்! - tutucorin fire gun shot

மதுரை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிபிஐ தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

madurai high court

By

Published : Sep 21, 2019, 9:45 AM IST

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றியும், 4 மாதத்தில் விசாரணையை முடிக்கவும் 2018 ஆகஸ்ட் மாதம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 222 வழக்குகளும் ஒரே வழக்காக பதிவு செய்து சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், சிபிஐ இயக்குநர் சார்பாக சிறப்பு குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ரவி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'தற்போது வரை 160 தொழில்நுட்பம் தொடர்பான ஆவணங்கள் ஆய்விற்காக அனுப்பப்பட்டு, அதில், 100 ஆவணங்களுக்கு பதில் கிடைக்கப்பெற்றுள்ளன. 300 நபர்களிடம் விசாரணை செய்யப்பட்டு 316 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு நாளன்று நடைபெற்ற நிகழ்வுகள், அதற்கான காரணம், அனுமதி பெறாமல் கூடியது, அவர்களிடம் ஏதேனும் ஆயுதங்கள் இருந்ததா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, ஏற்கனவே வழங்கப்பட்ட காலத்தை நீட்டித்து ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட வேண்டும்' என சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது சிபிஐ தரப்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விசாரணை குறித்தும், காவல்துறை மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் சீலிட்ட கவரில் நிலை அறிக்கை தாக்கல் செய்யபட்டது. இந்த அறிக்கை நீதிமன்ற பார்வைக்கு மட்டும் என சிபிஐ தரப்பில் கூறியதையடுத்து இவ்வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details