ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் "ராமேஸ்வரம் தீவு பகுதியில் வாழும் பெரும்பாலான மக்கள் மீனவ தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர். ராமேஸ்வரத்தில் உள்ள அருள்மிகு ராமநாத சாமி கோயிலுக்கு வருடந்தோறும் ஏராளமான பக்தர்கள் நாடு முழுவதும் இருந்து வருகின்றனர். மேலும் புண்ணிய தலமாக கருதி மக்கள் ராமேஸ்வரதிற்கு வருகை புரிகிறார்கள். தற்போது ராமேஸ்வரம் தீவு பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது ரமேஸ்வரம் தீவின் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் அமையும். எனவே ராமேஸ்வரத்தில் டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி அளிக்கக் கூடாது எனக் கோரி அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் மனு மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே ராமேஸ்வரம் தீவு பகுதியில் அமையவுள்ள அரசு டாஸ்மாக் கடையை திறக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
ராமேஸ்வரம் தீவில் அரசு டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது - நீதிமன்ற உத்தரவு!
மதுரை: ராமேஸ்வரம் தீவில் அரசு டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
Madurai high court bench
இந்த மனு இன்று நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது ராமேஸ்வரம் தீவில் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என்ற மனுதாரரின் மனுவை ஏற்று, டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.