மதுரை:பழங்காநத்தத்தைச் சேர்ந்தவர் முகம்மது இஸ்மாயில். இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாநகராட்சியில் நான் பில் கலெக்டராக கடந்த ஓய்வு பெற்றேன். விதிமுறைகளின்படி கண்காணிப்பாளர் அல்லது உயர் அதிகாரி வரை பதவி உயர்வு பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் 1992-ல் சிவபாக்கியம் என்பவர் மதுரை மாநகராட்சியில் கருணை அடிப்படையில் சத்துணவு பணியாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1994ஆண்டு அந்த வேலையை ராஜினாமா செய்துள்ளார். அன்றைய தினமே அவரை பொதுப்பிரிவில் டைப்பிஸ்ட் ஆக நியமனம் பெற்றார். பின்னர் மாநகராட்சி கண்காணிப்பாளராக பதவி உயர் பெற்றார். 2015-ல் மாநகராட்சி சட்ட அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இவரது பதவி உயர்வு நடவடிக்கைகளை தணிக்கைத்துறை சார்பில் ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் அதுதொடர்பான அறிக்கையில், பொது சுகாதாரப்பிரிவில் பணியாற்றுபவர்களை பொதுப்பிரிவுக்கு மாற்றக்கூடாது என்ற அரசாணை நிலுவையில் இருக்கும் போது, அதை மீறி சிவபாக்கியத்தை பொதுப்பிரிவில் டைப்பிஸ்ட்-ஆக பணியமர்த்தியது எப்படி? என்று ஆதாரங்களுடன் பதில் அளிக்க வேண்டும் என்று தணிக்கை அதிகாரிகள் கேள்வி எழுப்பி, அவரது பணி நியமனம் தணிக்கை தடைக்கு உட்படுத்தப்படுகிறது என்றும் உத்தரவிட்டனர்.
அடுத்ததாக சிவபாக்கியம், 1997 முதல் 2000ம் ஆண்டு வரை சட்டப்படிப்பு படித்ததாக தெரிகிறது. சட்டக்கல்லூரி வகுப்பில் நேரடியாக பங்கேற்று மட்டுமே படிக்க முடியும். ஆனால் அந்த சமயத்தில் சிவபாக்கியம், அரசுப்பணியில் இருந்து அரசின் சம்பளத்தை பெற்றுள்ளது முரண்பாடாக உள்ளது. இதற்காக அவர் முன்அனுமதியும் பெறவில்லை என்றும் தணிக்கை அதிகாரிகளின் குற்றச்சாட்டு.