மதுரை: மேலூர் வட்டம், மணப்பச்செரி கிராமத்தைச் சேர்ந்த காடப்பன் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார், அதில், "மதுரை மாவட்டம், மணப்பசேரி கிராமம், வெ.புதூர் பகுதியிலுள்ள ஸ்ரீ முத்துபிடாரி அம்மன், ஸ்ரீ முடிமலையாண்டி, ஸ்ரீ வேப்பிலை கருப்பசாமி கோயில் சார்பாக பல ஆண்டுகளாக பங்குனி மாதம் மஞ்சுவிரட்டு நடத்தி அன்று இரவே நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம்.
எங்களது கிராமத்தின் அருகே பெரிய ஊர் எம்.வெள்ளாளபட்டியில் மஞ்சுவிரட்டு வைத்த மறு வாரத்தில் எங்கள் ஊரில் மஞ்சுவிரட்டு வைப்பது வழக்கம். இந்த சூழ்நிலையில் மார்ச் 18ஆம் தேதி பெரிய ஊர் எம்.வெள்ளாளப்பட்டியில் மஞ்சுவிரட்டு நடத்த உயர் நீதிமறைம் மதுரைக் கிளையில் அனுமதி அளித்துள்ளது.
எனவே, மணப்பசேரி கிராமம் வெ.புதூரில் வருகிற வெள்ளிக்கிழமை மார்ச் 25ஆம் தேதி மஞ்சுவிரட்டு நடத்தி அன்று இரவு நாடகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மஞ்சுவிரட்டு போட்டியில் அசம்பாவிதங்கள் நடக்காத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.