தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி வீடியோ விவகாரத்தில் பாஜக பிரமுகருக்கு முன் ஜாமின் வழங்க மறுப்பு! - உயர்நீதிமன்ற மதுரை மதுரைக்கிளை

பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவது போல் வீடியோ வெளியிட்ட டெல்லி பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு விசாரணையை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.

Madurai High Court Adjourns Bail Petition Hearing of Bharatiya Janata Party Executive
பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் முன் ஜாமின்

By

Published : Mar 14, 2023, 3:50 PM IST

மதுரை: டெல்லியைச் சேர்ந்த பிரசாந்த் குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமின் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். இவர் டெல்லி பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகராக உள்ளார். மேலும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மூன்றாம் தேதி பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் கொடூரமாகத் தாக்கி கொலை செய்வது போன்ற போலி வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் செய்திருந்தார். மேலும் பீகார் மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்குத் தமிழகம் பாதுகாப்பு இல்லை என பதிவேற்றம் செய்திருந்தார்.

இந்த வீடியோ தான் தயாரித்தது இல்லை என்றும் வந்த தகவலை மீண்டும் ஃபார்வேர்ட்டு செய்துள்ளதாகவும், இதில் எந்த உட்கருத்தும் இல்லை, தான் அரசியல் கட்சியில் உள்ளதால் பழிவாங்கும் நோக்கோடு என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்து எனவே தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர் திட்டமிட்டு தமிழகத்தில் அமைதியைச் சீர்குலைக்க வேண்டும் என்று இது போன்ற வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் ஒரு பதட்டமான சூழல் நிலவியது. எனவே இவரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், ஆகையால் இவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார்.

இதனைப் பதிவு செய்த நீதிபதி இது போன்று வீடியோக்கள் பதிவு செய்வதைப் பார்க்கும்போது, இந்த வீடியோ தமிழகத்தில் பிற மாநில தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது போல் வீடியோ சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மிகப்பெரிய சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவது போன்ற பதட்டமான சூழலும் நிலவியது என கருத்து தெரிவித்த நீதிபதி, மனுதாரருக்கு முன் ஜாமின் வழங்க மறுத்து இந்த மனு குறித்து காவல்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: போபால் விஷவாயு கசிவு விபத்து: கூடுதல் இழப்பீடு கோரிய மத்திய அரசின் மனு தள்ளுபடி!

ABOUT THE AUTHOR

...view details