தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லே-அவுட்டுகள் வழக்கு: நகரமைப்பு திட்ட இயக்குநர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு - Document R

மதுரை: மனையிடங்கள், லே அவுட்டுகளை முறைப்படுத்த ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரக் கோரிய வழக்கில் மாநில வீட்டு வசதி, ஊரக மேம்பாட்டுத் துறை செயலர், நகரமைப்பு திட்ட இயக்குநர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai

By

Published : Jun 24, 2019, 9:44 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த மதிவாணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," ரியல் ஏஜென்ட்கள், புரோக்கர்கள் தமிழ்நாட்டில் அங்கீகாரம் பெறாத லே-அவுட்களை உருவாக்கி விதிகளை பின்பற்றாமல் செயல்பட்டு பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர்.

மேலும் இதனைத் தீவிரமாக கருத்தில் கொண்டு அணுகிய உயர்நீதிமன்றம் அங்கீகரிக்கப்படாத மனையிடங்கள், வரைப்பட அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்கள், நிலப்பரப்புகளை பத்திரப்பதிவு செய்வதற்கு தடை விதித்தது.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத லே-அவுட்டுகளை முறைப்படுத்துவது சம்பந்தமாக மாநில நகர், ஊரகமைப்பு மேம்பாட்டு துறை இயக்குநர் 2017ஆம் ஆண்டு அரசாணை ஒன்றை பிறப்பித்தார். அதில், அங்கீகரிக்கப்படாத லே-அவுட்டுகளை வரைமுறைப்படுத்த www.tnlayoutreg.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.

இந்த சூழ்நிலையில் அங்கீகரிக்கப்படாத மனைகளை முறைப்படுத்த ஆன்லைனில் விண்ணப்பிக்கும் திட்டம் 16.11.2018இல் நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக CMDA (அ) DTCP ஆகிய அலுவலகங்களை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டது. அனைவராலும் CMDA (அ) DTCP அலுவலகத்தை நேரில் அணுக இயலாது. அதில் பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளையும் சந்திக்கின்றனர். ஆகவே மனையிடங்கள், லே- அவுட்டுக்ளை முறைப்படுத்த ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர், இது தொடர்பாக மாநில வீட்டு வசதி, ஊரக மேம்பாட்டுத் துறை செயலர், நகரமைப்பு திட்ட இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details