தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணீஷ் காஷ்யப் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு - தேசிய பாதுகாப்பு சட்டம் நீக்கம்

Bihar YouTuber Manish Kashyap: பீகார் தொழிலாளிகள் தமிழ்நாட்டில் தாக்குவது போல் வீடியோ வெளியிட்ட பீகாரை சேர்ந்த மணீஷ் காஷ்யப் மீது பதியப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2023, 4:32 PM IST

மதுரை:டெல்லியை சேர்ந்த திரிபுவன் குமார் திவாரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 'என்னுடைய சகோதரர் திரிபுராரி குமார் திவாரி (எ) மணீஷ் காஷ்யப் பீகாரை சேர்ந்த பிரபல யூடியூபர். இவர் 2018 ஆம் ஆண்டு "Sach Tak News Channel" என்ற யூடியூப் பக்கத்தை உருவாக்கி பீகார் மக்களின் குறைகளையும், ஊழல்களையும் வீடியோவாக பதிவு செய்து யூடியூப் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்.

இதுபோன்ற செயல்பாடுகளினால் சமூக வலைதளத்தில் மிகப் பிரபலமான நபராக மாறினார். 2020 ஆம் ஆண்டு பீகார் சட்டமன்ற தேர்தலில் சன்பதியாவில் போட்டியிட்டு 9,239 வாக்குகள் பெற்று 3ஆம் இடம் பிடித்தார். இந்த நிலையில், திரிபுராரி குமார் திவாரி (எ) மணீஷ் காஷ்யப் பீகார் தொழிலாளிகள் தமிழ்நாட்டில் தாக்குவது போன்ற வீடியோ வெளியிட்ட வழக்கில் முதலில் பீகார் காவல்துறையினர் கைது செய்தனர். பின் மதுரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மதுரை காவல்துறையினர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எனது சகோதரர் திரிபுராரி குமார் திவாரி (எ) மணீஷ் காஷ்யப் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

மணீஷ் காஷ்யப் மார்ச் 30, 2023-ல் கைது செய்யப்பட்டார். 4 மாதங்களாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இடையில் மதுரை மத்திய சிறையில் உள்ளார். மார்ச் 30 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அடுத்த 5 நாட்களில் தேசிய பாதகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுகிறார். உரிய ஆவனங்கள் ஏதுமின்றி கைது செய்யபட்டுள்ளார். எனவே, யூடியூபர் திரிபுராரி குமார் திவாரி (எ) மணீஷ் காஷ்யப் மீது பதியபட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்' என அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர், சக்திவேல் அமர்வில் இன்று (நவ.10) விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், பிறப்பித்த உத்தரவில், விதிமுறைகளை பின்பற்றாமல் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்துள்ளதால், மணீஷ் காஷ்யப் மீது பதியபட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், மதுரை சைபர் கிரைம் போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரணை நடத்தலாம் என உத்தரவிட்டனர்.

சமூக வலைதளங்களில் பதிவிட்ட வீடியோவால் எழுந்த சர்ச்சை: தமிழ்நாட்டில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்து வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் கடுமையாக தாக்கப்படுவதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இது குறித்து மத்தியிலும் மாநிலத்திலும் பெரும் சர்ச்சைகள் எழுந்த நிலையில் இது தொடர்பாக, பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனங்களை பதிவிட்டிருந்த நிலையில், இந்த விவகாரத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனையாக நீதிமன்றம் வரை சென்றது. இதனடிப்படையில், தமிழ்நாடு சைபர் கிரைபர் போலீசாரின் புலன் விசாரணையில், பீகாரில் இருந்த மணீஷ் காஷ்யப் இவ்வாறு போலி வீடியோக்களை பரப்பி மக்களிடையே பதற்றை உருவாக்கினார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:YouTuber Manish Kashyap : யூடியூபர் மணீஷ் காஷ்யாப் வழக்கில் பாட்னா நீதிமன்றம் தீர்ப்பு.. தமிழக போலீசாருக்கு பின்னடைவா?

ABOUT THE AUTHOR

...view details