மதுரை:மதுரை மாவட்டம், மேலவளவு பஞ்சாயத்து தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்ளிட்ட 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அண்ணா பிறந்தநாளில் அவர்களில் மூன்று பேர் நன்னடத்தை காரணமாக, முன்விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள 14 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், கடந்தாண்டு எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு, பொது மன்னிப்பு அடிப்படையில், மீதமுள்ள 13 பேர் முன்விடுதலை செய்யப்பட்டனர்.
இதுகுறித்து மதுரை மாவட்டம் மேலூர் அருகே சென்னகரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ”மேலூர் அருகே உள்ள கே.முத்துவேல்பட்டி கிராமத்தில் பட்டியல் இன மக்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள மேலவளவு பஞ்சாயத்து 1996 ஆம் ஆண்டு பட்டியலின மக்களுக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட பிரிவாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பட்டியலினத்தை சேர்ந்த முருகேசன் மேலவளவு ஊராட்சி தலைவராகவும், இறந்த மூக்கன் துணை தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, கடந்த ஜூன் 30, 1997 ஆம் ஆண்டு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு தலைவராக தேர்வு செய்யப்பட்ட முருகேசன் உட்பட 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில், இந்த பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, கடந்த 18 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்தார்.