மதுரை: விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறைக்கு முரணான ஊராட்சி செயலாளர் நியமனத்திற்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பான மனு மீது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் மேலப்பாட்டம் கரிசல்குளம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி தாக்கல் செய்த மனுவில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், மேலப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செயலாளராக கோவிந்தம்மாள் என்பவர் பணிபுரிந்து வந்தார். அவரை பணியிட மாற்றம் செய்து அய்யனார் என்பவரை ஊராட்சி மன்ற செயலாளராக மாவட்ட நிர்வாகம் நியமனம் செய்தது. இந்நிலையில் உடல்நலம் குன்றி அய்யனார் இறந்துவிட்டார்.
எனவே, இந்த ஊராட்சி செயலாளர் பணியிடத்திற்கு மாவட்ட நிர்வாகம் பாலமுருகன் மற்றும் தர்மராஜ் என்பவரை பொறுப்பு செயலாளராக நியமனம் செய்தனர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் பஞ்சாயத்து விதிமுறைகளுக்கு முரணாக முருகன் என்பவரை பஞ்சாயத்து செயலாளராக நேரடி நியமனம் செய்துள்ளனர்.