தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலர் புகார் ஆணையம் அமைக்கக் கோரிய வழக்கு: தமிழ்நாடு தலைமைச் செயலர் பதிலளிக்க உத்தரவு

மதுரை: காவலர் புகார் ஆணையம் அமைக்கக் கோரிய வழக்கில் தமிழ்நாடு தலைமைச் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

காவலர் புகார் ஆணையம் அமைக்கக் கோரிய வழக்கு
காவலர் புகார் ஆணையம் அமைக்கக் கோரிய வழக்கு

By

Published : Jul 15, 2021, 3:47 PM IST

Updated : Jul 15, 2021, 4:09 PM IST

மதுரையைச் சேர்ந்த ஜோதிபாஸ், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "2006ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் காவலர் புகார் ஆணையம் அமைப்பதற்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. ஆனால், 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு காவலர்கள் புகார் ஆணையத்திற்குச் சட்டம் இயற்றியது.

இதன்படி காவலர்கள் குறித்து மாவட்ட அளவில் புகார் அளிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநில அளவில் புகார் அளிப்பதற்கு உள்துறைச் செயலர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் காவலர் புகார் ஆணையம் முறையாக செயல்பட முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

'உச்ச நீதிமன்ற உத்தரவினைப் பின்பற்றுக'

எனவே, 2006ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவலர் புகார் ஆணையத்தில் சேர்மனாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கவும் அதன் கீழ் உறுப்பினர்களை சேர்க்கவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மாநில அரசு தரப்பில் இதே கோரிக்கைகளுடன் பல மனுக்கள் சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வில் விசாரணைக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 202 வழக்கறிஞர்கள் தற்காலிக நியமனம்!

Last Updated : Jul 15, 2021, 4:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details