தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொலை செய்யப்பட்ட விசாரணைக் கைதியின் மனைவிக்கு அரசு வேலை கோரிக்கை; ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவு - விசாரணை கைதி மரணம் News in Tamil

2016ஆம் ஆண்டு மதுரை மத்திய சிறையில் விசாரணைக் கைதி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், இழப்பீடாக ரூ.25 லட்சம் மற்றும் அரசு வேலை வழங்கக் கோரி அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 16, 2023, 3:53 PM IST

மதுரை:மதுரை மத்திய சிறையில் 2016ஆம் ஆண்டு விசாரணைக் கைதி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், 25 லட்ச ரூபாய் மற்றும் அரசு வேலை இழப்பீடாக வழங்கக் கோரி, அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த திருச்செல்வி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் 'மதுரையில் கடந்த 2016ஆம் ஆண்டு சில குற்ற வழக்குகளில் தனது கணவர் செந்தில்குமாரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைத்தனர். எனது கணவர் மற்றொரு கைதியால் சிறையிலேயே கொலை செய்யப்பட்டார்.

இதையும் படிங்க:பெரம்பலூரில் தடை செய்யப்பட்ட நாட்டுச் சாராயம் அழிப்பு - இரு பெண்கள் கைது

இந்த விவகாரத்தில் தனக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்; மேலும், அரசு வேலை வழங்க உத்தரவிட வேண்டும்' என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை இன்று (மே 16) விசாரித்த நீதிபதி விஜயகுமார் பிறப்பித்த உத்தரவில், 'விசாரணைக் கைதியாக அழைத்துச் செல்லப்பட்ட தனது கணவர் உயிரிழந்த விவகாரத்தில் இழப்பீடு வழங்கக் கோரி இந்த மனுவினை மனுதாரர் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு மற்றொரு கைதியின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, சிபிசிஐடி விசாரணை அமைப்பிடமிருந்து அறிக்கையைப் பெற்று அதன் அடிப்படையில் மனுதாரரின் கோரிக்கை குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்து 12 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு’’ வழக்கினை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க:"சிபிஐ அதிகாரிகள் சொத்துகளை சரியாக மதிப்பிடவில்லை" - சிறப்பு நீதிமன்றம் அதிருப்தி!

ABOUT THE AUTHOR

...view details