தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்' - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை: தூய்மை பணியாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவும், அவற்றை பணியாளர்கள் முறையாக பயன்படுத்துகின்றனரா எனவும் அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Sanitary workers
Ensure the safety measures of sanitary workers

By

Published : Jun 1, 2020, 6:45 PM IST

கன்னியாகுமரியைச் சேர்ந்த லூயி தூய்மை தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சுலிப், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “கன்னியாகுமரி,நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அரசு மருத்துவமனை, பேரூராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் பொது இடங்கள், சாலைகளில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும்போது, சாலைகளில் வீசப்பட்டு சென்ற பயன்படுத்தபட்ட முகக்கவசங்களை எவ்வித பாதுகாப்பு உபகரணங்களின்றி கைகளில் சுத்தம் செய்வதால் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

தூய்மைப் பணியர்களுக்கு அலுவலர்கள் எவ்வித கையுறை, முகக்கவசம், கிருமி நாசினிகள், சோப் உள்ளிட்ட பாதுகாப்பு பொருள்களையும் வழங்கவில்லை. இதனால் எளிதாக கரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது.

மேலும் கரோனா சிகிச்சை பிரிவில் பணிபுரியம் மருத்துவர்கள்,செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சரியான முறையில் உணவு மற்றும் விடுப்பு வழங்காமல் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்படுவதால், அவர்கள் மிகுந்த மனவேதைக்கு ஆளாகிறார்கள்.

மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் ஆயுள் காப்பீடு செய்ய வேண்டும். ஆனால், இது தொடர்பாக அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தூய்மைப் பணியாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி, மருத்துவ பரிசோதனை செய்து மாவட்ட அளவில் கண்காணிக்க அலுவலர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தூய்மைப் பணியாளர்கள் முறையாக முகக்கவசம், கையுறை பயன்படுத்த வேண்டும். அலுவலர்கள் அவற்றை தினசரி மேற்பார்வையிட்டு உறுதி செய்ய வேண்டும். தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணியத் தவறும்பட்சத்தில் அதை புகைப்படம் எடுத்து அவர்கள் மீது மண்டல அலுவலரிடம் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்கறி சந்தை ,மீன் சந்தை பகுதிகளில் அதிக அளவில் குப்பை சேரும் இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் கட்டாயம் boots shoe பயன்படுத்தவேண்டும். அதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டுமென உத்தரவிட்டனர்.

மேலும் இந்த நடைமுறையை மதுரை மாநகராட்சி மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு உள்பட்ட திருச்சி,நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல், மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் பின்பற்றவேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details