தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சி வழக்கில் அரசு வெளியிட்ட அரசாணையை திரும்பப் பெற்று புதிய அரசாணையை வெளியிட வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை - உயர் நீதிமன்ற கிளை

மதுரை: பொள்ளாச்சி வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை திரும்பப் பெற்று பாதிக்கப்பட்டவரின் அடையாளமின்றி புதிதாக அரசாணை வெளியிட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

1

By

Published : Mar 15, 2019, 6:04 PM IST


திருச்சியை சேர்ந்த இளமுகில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், சமூக வலைதளங்களால் கல்வி, தகவல் தொடர்பு பல்வேறு நன்மைகள் இருந்தும், தீமைகள் அதிகளவில் உள்ளன.பாலியல் உட்பட பல்வேறு கொடுமையான குற்றங்களுடன் தொடர்புடைய வீடியோக்கள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பரப்பப்படுகிறது.

பாலியல் வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை மற்றும் நீதிமன்ற ஆவணங்கள், ஊடகங்களில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை வெளியிடக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை மீறினால் இந்திய தண்டனைச் சட்டம் 228 ஏ பிரிவின் கீழ 6 மாதம் முதல் 2 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும். அண்மையில் பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் புகார் அளித்த பெண்ணின் அடையாளத்தை எஸ்பி வெளியிட்டார். இதன் விளைவாக அப்பெண்ணின் சகோதரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனால் பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான விசாரணையை விரைவில் முடித்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவும், பாலியல் வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும்சிறப்பு விசாரணைப்படை அமைக்கவும்,பாலியல் வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன்,எஸ் எஸ் சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என சட்டமும் உச்ச நீதிமன்ற உத்தரவும் உள்ளது. ஆனால் பொள்ளாச்சி விவகாரத்தில் இது முறையாக கடைபிடிக்கப்படவில்லை.இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையிலும் கூட பாதிக்கப்பட்டவர் தொடர்பான அடையாளம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் இந்த விவகாரத்தில் துணிச்சலாக புகார் அளித்தப் பெண்ணின் அடையாளத்தை விதிகளும் உத்தரவுகளும் இருந்தும் வெளியிட்டது ஏன்? இவ்வாறு செய்தால் இது தொடர்பாக புகார் அளிக்க யார் முன்வருவர்? என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து பொள்ளாச்சி விவகார வீடியோ பல லட்சக்கணக்கானோரால் பகிரப்பட்டு வருகிறது. இது சமூக பாதிப்பை ஏற்படுத்தும், தவறு செய்யத் தூண்டும் என மனநல மருத்துவர் ஷாலினி தெரிவித்துள்ளார். ஆகவே பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான வீடியோக்களை தடை செய்ய வேண்டும்.

நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிடப்படுகிறது.

இணையம் தொடர்பான நன்மை தீமைகளை அறியும் விதமாக விழிப்புணர்வுகளை முன்னெடுக்கவேண்டும்.செல்போன் மக்களின் வாழ்வில் ஒரு அங்கமான நிலையில் மத்திய மாநில அரசுகள் அதனை பாடமாகக்கொணர முயற்சி எடுக்க வேண்டும்.

பொள்ளாச்சி வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை திரும்பப் பெற்று பாதிக்கப்பட்டவரின் அடையாளமின்றி புதிதாக அரசாணை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிடப்படுகிறது.

பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்களை இணையதளங்களில் இருந்து நீக்க மத்திய அரசுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான வீடியோக்களை புகைப்படங்களை வைத்திருப்பதும் பகிர்வதும் குற்றம். இதுதொடர்பாக தமிழக அரசு விரிவான விளம்பரம் செய்ய வேண்டும்.

விதிகளையும் சட்டங்களையும் அறிந்தும் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வரம்பிற்கு அப்பாற்பட்டது என்பதால் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details