தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீண்டு வா சுர்ஜித் மீண்டு வா...! - மனமுருகி மாற்றுத்திறனாளிகள் வழிபாடு - ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித்

மதுரை: ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித் மீண்டு வர வேண்டி மாற்றுத்திறனாளிகள் மனமுருகி வழிபாடு நடத்தினர்.

surjith

By

Published : Oct 26, 2019, 11:25 PM IST

Updated : Oct 26, 2019, 11:37 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஒரு நாளைக் கடந்து குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி நீடித்துவருகிறது. ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை 100 அடிக்குச் சென்றுவிட்ட நிலையில், கிணற்றுக்கு மூன்று மீட்டர் பக்கத்தில் குழி தோண்டும் பணி நடைபெற்றுவருகிறது.

இருபத்தெட்டு மணி நேரத்தை தாண்டி, சுர்ஜித்தை மீட்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், குழந்தையை மீட்கும் பணியை தொலைக்காட்சியில் பார்க்கும் பொதுமக்கள் சுர்ஜித் மீண்டு வர வேண்டும் என்று வழிபாடு செய்துவருகின்றனர்.

மீண்டு வா சுர்ஜித்

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் சுர்ஜித்திற்காக வழிபாடு நடத்திய சம்பவம் பலரையும் நெகிழவைத்துள்ளது. அப்போது, பெண்கள், குழந்தைகள் என அனைவரும் மீண்டு வா சுஜித் என்ற முழக்கத்துடன் வழிபாடு நடத்தினர்.

Last Updated : Oct 26, 2019, 11:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details