தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அறுவை சிகிச்சை நோயாளிகள் அலைகழிப்பு - அரசு ராஜாஜி மருத்துவமனை ஊழியர்கள் மீது புகார் - medical staff irresponsibility over patients

மதுரை: அறுவை சிகிச்சை செய்துகொண்ட இரண்டு நோயாளிகளை உடனடியாக வார்டுக்கு அழைத்துச் செல்லாமல் ஊழியர்கள் அலச்சியமாக செயல்பட்டதாக அரசு ராஜாஜி மருத்துவமனை மீது புகார் எழுந்துள்ளது.

madurai govt hospital medical staff irresponsibility over patients
madurai govt hospital medical staff irresponsibility over patients

By

Published : May 27, 2020, 12:21 PM IST

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற மிகப் பழமையான மருத்துவமனையாக திகழ்ந்து வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான நபர்கள் வெளி, உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

அதேசமயம் உள்நோயாளிகளாக ஒரு நாளைக்கு மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சமயநல்லூர் பகுதியைச் சேர்ந்த இருவர் குடல்வால் அறுவை சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இருவருக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தொடர் சிகிச்சைக்காக நீண்ட நேரமாக படுக்கை வசதி செய்து கொடுக்காமல் ஊழியர்கள் அலட்சியத்துடன் நடந்து கொண்டனர்.

இதையும் படிங்க...அலட்சியம்...! 70 நாள்களுக்கு பிறகு கை குழந்தை தொடையிலிருந்து எடுத்த தடுப்பூசி துண்டு!

இதனால் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளிகள் மருத்துவமனை வளாகத்தில் திறந்த வெளியில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பின்னர் நீண்ட நேரத்திற்குப் பின்னர் நோயாளிகளை மருத்துவமனைக்குள் அழைத்து சென்றனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details