தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சர்வதேச பேட்மிண்டன்: தங்கம் வென்ற மதுரை மங்கை! - Madurai girl

மதுரை: சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் அவ்வை மாநகராட்சி பள்ளி மாணவி ஜெர்லின் அனிகா தங்கம், இரண்டு வெள்ளி வென்று இந்தியாவுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமைத் தேடித்தந்துள்ளார்.

மதுரை பெண்

By

Published : Jul 16, 2019, 2:58 PM IST

காதுகேளாதோருக்கான சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீன நாட்டிலுள்ள தைபேயில் கடந்த 11ஆம் தேதி தொடங்கியது.

அவ்வை மாநகராட்சி பள்ளி மாணவி ஜெர்லின் அனிகா

இதில், இந்தியா உட்பட அமெரிக்கா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, கனடா, ஜப்பான், ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட 27 நாடுகளிலிருந்து 200-க்கும் அதிகமான வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற மதுரை பெண்

இந்தியாவிலிருந்து 25-க்கும் மேற்பட்டோர் இப்போட்டிகளில் கலந்துகொண்டனர்.

காதுகேளாதோருக்கான சர்வதேச பேட்மிண்டன் போட்டி

இப்போட்டியில் இந்தியாவின் சார்பாக அவ்வை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்றுவரும் ஜெர்லின் அனிகா கலந்துகொண்டு காது கேளாதோருக்கான பேட்மிண்டன் போட்டிகளில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமைத் தேடித்தந்துள்ளனர்.

சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற மதுரை பெண்

ABOUT THE AUTHOR

...view details