தமிழ்நாடு

tamil nadu

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம்: ரூ.6 கோடி மதிப்பில் புனரமைப்புப் பணிகள் தொடங்கின!

By

Published : Sep 20, 2022, 4:50 PM IST

மதுரையின் அடையாளமாகத் திகழும் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் முதற்கட்டமாக ரூ.2.12 கோடி மதிப்பில் பழமை மாறாமல் புனரமைப்பு செய்யும் பணிகள் இன்று தொடங்கப்பட்டன.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம்: ரூ.6 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் தொடங்கின...
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம்: ரூ.6 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் தொடங்கின...

மதுரை:மதுரையின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான காந்தி நினைவு அருங்காட்சியகம் ரூ.6 கோடி மதிப்பில் புனரமைப்புச்செய்யப்படும் என சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

சற்றேறக்குறைய 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் மதுரையினை ஆண்ட நாயக்க மன்னர்களின் வாரிசான ராணி மங்கம்மாளின் கோடைகால அரண்மனையாகத் திகழ்ந்தது.

ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகமாகவும் விளங்கியது. கடந்த 1960ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் தேசத்தந்தை காந்தியடிகளின் நினைவை சுமக்கும் வண்ணம் அவர் பயன்படுத்திய ஆடைகள் பொருட்கள் மற்றும் அவர் சுடப்பட்டு இறந்த அன்று அணிந்திருந்த ரத்தக்கறை படிந்த உடைகள் இங்கேயே நினைவுச்சின்னம் ஆக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த கட்டடத்தைப்பாதுகாக்கும் பொருட்டு முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். அதன் அடிப்படையில் முதல் கட்டமாக, காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் கழிவறை, லிஃப்ட், பளிங்கு கற்கள், வண்ணம் பூசுதல் உள்ளிட்டப் பல்வேறு பணிகளுக்கு ரூ.3 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

மதுரையைச்சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு ரூ.2 கோடியே 12 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் 12 மாதங்களுக்குள் மேற்கண்ட பணிகளை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைகளை அடுத்த 12 மாதங்களுக்குள் முடிக்க ஒப்பந்த நிறுவனத்திற்கு பொதுப்பணித்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளதன் அடிப்படையில் குறிப்பிட்டு ஒப்பந்த நிறுவனம், தனது பணியை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் இன்று (அக்.20) தொடங்கியுள்ளது.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம்: ரூ.6 கோடி மதிப்பில் புனரமைப்புப் பணிகள் தொடங்கின!

இதையும் படிங்க:திமுகவில் இருந்து விலகல் ...அரசியலில் இருந்து ஓய்வு...சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிக்கை

ABOUT THE AUTHOR

...view details