தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிணற்றில் இருந்த முதலை வனத்துறையினரால் பத்திரமாக மீட்பு! - பாசன கிணற்றில் முதலை

மதுரை: மேலூர் அருகே பாசனக் கிணற்றில் இருந்த முதலை ஒன்றை வனத்துறையினர் மீட்டு, சென்னையில் உள்ள முதலைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

madurai forest officers rescued a crocodile_which had fallen to well_
முதலை

By

Published : Jun 8, 2020, 12:12 AM IST

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ளது வண்ணாம்பாறைப்பட்டி. இங்குள்ள ஊரணியில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு முதலை இருப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்குத் தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து வனவர் கம்பக்கொடியான் தலைமையில், வந்த வனத்துறையினர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தேடியும் முதலை சிக்காததால், மீண்டும் முதலையைப் பார்த்தால் தகவல் தெரிவிக்கும்படி கிராம மக்களிடம் தெரிவித்துவிட்டுச் சென்று விட்டனர்.

மீட்கப்பட்ட முதலை
இந்நிலையில் இந்த ஊரணிக்கு அருகே உள்ள முல்லைப்பெரியாறு - வைகை ஒரு போக பாசன விவசாயிகளின் சங்கத் தலைவர் முருகன் என்பவருக்குச் சொந்தமான பாசனக் கிணற்றில் மீன் பிடிப்பதற்காக வலை விரிக்கப்பட்டு, மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது, முதலை போன்ற உருவம் தென்பட்டுள்ளது.
இதனையடுத்து கிணற்றில் இருந்த நீரை உடனடியாக மோட்டார் மூலம் வெளியேற்றி பார்த்தபோது, மூன்று அடி நீளமுள்ள முதலை இருந்துள்ளது.
அதனைப் பிடித்த பின்னர் வனத்துறையினருக்கு மக்கள் தகவல் அளித்தனர். அதையடுத்து அங்கு விரைந்த வனத்துறையினர் முதலையை மீட்டு சென்னையில் உள்ள முதலைகள் காப்பகத்திற்கு அனுப்பிவைக்க உள்ளதாகத் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details