தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலம் கட்டுமான விபத்து - சரமாரி கேள்வி எழுப்பிய பிடிஆர் - madurai latest news

மதுரை நத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் பாலத்தின் கட்டுமானப் பணியின்போது இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுகின்றன என தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சரமாரி கேள்வி எழுப்பிய பிடிஆர்
சரமாரி கேள்வி எழுப்பிய பிடிஆர்

By

Published : Aug 29, 2021, 7:51 AM IST

மதுரை : நத்தம் சாலையில் பேங்க் காலனி அருகே கட்டப்படும் பாலத்தின் கட்டுமானப் பணியின்போது பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மூன்று பணியாளர்கள் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்விற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “இந்த விபத்து ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்தபோது இரண்டு பணியாளர்கள் மட்டுமே இருந்துள்ளனர். கருவிகள் பராமரிப்பு சரியாக நடைபெற்றதா? என்பது குறித்து கேள்வி எழுகிறது.

ஆய்வு மேற்கொண்ட பிடிஆர்
இங்கு பணியாற்றும் நபர்களுக்கு முறையாக பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறதா? பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ளூர் தொழிலாளர்கள் இல்லை. அதேபோன்று ஒப்பந்ததாரரும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர். இந்த விபத்து தொடர்பாக நிறையக் கேள்விகள் எழுகின்றன.
பாலம் கட்டுமான விபத்து
போதுமான பயிற்சி இல்லாத இளைஞர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்தியிருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. இதுபோன்ற ஆபத்தான பணிகளை எந்த அடிப்படையில் இவர்கள் மேற்கொள்கிறார்கள் என தெரியவில்லை. இதுகுறித்து முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போது இந்தப் பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details