மதுரை:முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (மார்ச் 5) மாலை சென்னையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காகத் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் உள்ளிட்டோர் சென்னைக்கு செல்ல மதுரை விமான நிலையம் வந்திருந்தனர்.
ஏர் இந்தியா விமானத்தில் மதியம் 2 மணி அளவில் அவர்கள் புறப்பட இருந்தனர். இந்நிலையில், விமான ஓடுபாதையிலிருந்து பறக்க இருந்தபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானம் மீண்டும் தரை இறக்கப்பட்டு இரண்டு மணி நேரம் தாமதமானது.