தீயை அணைக்கும்போது உயிரிழந்த வீரர்களுக்கு முதலமைச்சர் இரங்கல்! - மதுரை தீயணைப்பு
11:42 November 14
மதுரையில் தீயணைக்கும்போது சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த இரண்டு தீயணைப்புப்படை வீரர்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த தீயணைப்புப்படை வீரர்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும்; விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணத்தொகையாக வழங்கப்படும் என்றும்; அவர்களின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.