தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையை கலக்கும் ரஜினி ரசிகர்களின் அரசியல் சுவரொட்டிகள் - 'முடிவு சொல் தலைவா!' - madurai fan posters urge rajinikanth to take political entry

மதுரை: ரஜினியின் அரசியல் வருகை குறித்து கடந்த இரண்டு நாள்களாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

poster
ரஜினியின் அரசியல் சுவரொட்டிகள்

By

Published : Nov 3, 2020, 10:50 AM IST

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டதை போன்ற அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரவியது.

ஆனால் அது தன்னுடைய அறிக்கை அல்ல, அதில் வந்திருக்கும் அவருடைய உடல்நிலை மற்றும் மருத்துவர்கள் கூறிய அறிவுரைகள் தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்து ஆலோசித்து தனது அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

ரஜினியின் அரசியல் சுவரொட்டிகள்

இந்நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டிவருகின்றனர். அந்த வகையில் மதுரை மாநகர் முழுவதும், “காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன் வார்த்தையா.. வாக்கா... முடிவு செய்யுங்கள் முடிவு சொல்லுங்கள் தலைவா!" மாற்றத்தை எதிர்பார்க்கும் தமிழக மக்கள்" என்ற வாசகங்களுடன் அவரது ரசிகர்களால் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க:அரசியலுக்குள் வா தலைவா...! - ரஜினிக்கு அஞ்சல் அட்டையில் அழைப்பு கொடுக்கும் ரசிகர்கள்!

ABOUT THE AUTHOR

...view details