தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவகங்கைக்கு படையெடுத்த மதுரை மது பிரியர்கள் - டாஸ்மாக்

மதுரை: ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், மதுபானங்கள் வாங்குவதற்காக மதுரை மது பிரியர்கள் சிவகங்கைக்கு படையெடுத்துள்ளனர்.

மது பிரியர்கள்
மது பிரியர்கள்

By

Published : Jun 25, 2020, 6:03 PM IST

கரோனா வைரஸ் தொற்று தீவிரமடைவதை அடுத்து, மதுரையில் ஜூன் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரையில் அத்தியாவசியத் தேவைகளுக்கான கடைகள் மட்டும் பிற்பகல் இரண்டு மணி வரை திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு அனுமதியில்லை.

இந்நிலையில், மதுரை மாவட்ட எல்லையோரம் உள்ள மதுப் பிரியர்கள், எல்லையோர மாவட்டங்களான திண்டுக்கல், தேனி, விருதுநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

மதுரை - சிவகங்கை மாவட்டங்களின் எல்லையிலுள்ள பனையூர் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான கடைக்கு இன்று (ஜூன் 25) படையெடுத்த மதுப் பிரியர்கள், ஏறக்குறைய 1 கி.மீ. தூரத்திற்கு தகுந்த இடைவெளியின்றி மதுபாட்டில்கள் வாங்குவதற்காக வரிசையில் முண்டியடித்தனர்.

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மதுரையை ஒட்டிய எல்லையோர மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளதாக, மதுபான கடை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details