தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 7, 2020, 11:54 PM IST

Updated : Apr 8, 2020, 3:02 PM IST

ETV Bharat / state

காணொலி மூலம் வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி

மதுரை: ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், காணொலி மூலம் உயர் நீதிமன்ற நீதிபதி 11 மனுக்களை விசாரித்துள்ளார்.

madurai
madurai

கரோனா தடுப்புக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் பிணை மனுக்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற அடிப்படையில் விசாரணை நடக்கவுள்ளது. இதற்காக பிணை மனுக்களை போதுமான விவரங்களுடன் பிடிஎப் முறையில் Madurai.ecourt@gmail.com மற்றும் komalaacrt.mgr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் மனு செய்ய வேண்டும்.

இந்த விபரங்கள் முதன்மை அமர்வு நீதிபதி மற்றும் மாவட்ட அரசு வழக்கறிஞர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைக்கு பட்டியலிடப்படும். நீதிபதி, அரசு வக்கீல், மனுதாரர் வக்கீல் மற்றும் நீதிமன்ற தட்டச்சர் ஆகியோர் செல்போனில் வீடியோ காணொலி மூலம் இணைக்கப்படுவார்கள். அப்போது அரசு மற்றும் மனுதாரர் தரப்பு வக்கீல்களின் வாதம் நடக்கும். இருதரப்பு வாதங்களையும் காணொலி மூலம் கேட்ட நீதிபதி சம்பந்தப்பட்ட மனுக்களின் மீது தீர்ப்பளிப்பார்.

இதே இணைப்பில் இருக்கும் தட்டச்சர் நீதிபதியின் உத்தரவை தட்டச்சு செய்து வழங்குவார். ஒரு வழக்கின் விசாரணை முடிந்ததும், அடுத்த வழக்கின் வக்கீல் ஆஜராவார். இதே முறையில் விசாரணை நடத்தப்பட்டு உத்தரவுகள் வழங்கப்படும். இந்த முறையில் நடந்த விசாரணைக்காக மதுரை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கொலை, நிதி மோசடி, அடிதடி தகராறு உள்ளிட்ட வழக்குகளில் பிணை கேட்டு 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் அனைத்தையும் உயர் நீதிமன்ற நீதிபதி நசீமாபானு விசாரித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, 7 வழக்குகளில் பிணை வழங்கினார். மீதமுள்ள 4 வழக்குகள் மீதான விசாரணையை ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் நீதிமன்றங்கள் செயல்படுவது குறித்த அறிவிப்பு - இன்று வெளியாகும்?

Last Updated : Apr 8, 2020, 3:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details