தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’மதுரை மலர் சந்தை மீண்டும் பழைய இடத்தில்...’ - வியாபாரிகள் நம்பிக்கை - மதுரை அண்மைச் செய்திகள்

மதுரை மலர் சந்தை மீண்டும் பழைய இடத்தில் செயல்பட விரைவில் அனுமதி கிடைக்கும் என வியாபரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர்
மதுரை மாவட்ட ஆட்சியர்

By

Published : Sep 29, 2021, 7:13 AM IST

மதுரை: மாட்டுத்தாவணியில் செயல்பட்டுவந்த மலர் சந்தை போதிய கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால், தொடர்ந்து அங்கு செயல்பட மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டது.

அதன் பின்னர் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் தற்காலிக மலர்சந்தை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.

இடவசதியில்லாமல் வியாபாரிகள் சிரமம்

இட வசதியின்மையின் காரணமாக மலர் சந்தையை மீண்டும் பழைய இடத்திலேயே செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக இன்று (செப்.28) மலர் வியாபாரிகள் சங்கத்தினர், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் மலர் வியாபாரிகள் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மதுரை ஆம்னி பேருந்து நிலையத்தில் செயல்படும் தற்காலிக மலர் சந்தையில் போதிய இட வசதியில்லை.

இதனால் வியாபாரிகளும், விவசாயிகளும் மலர்சந்தையை மீண்டும் பழைய இடத்தில் செயல்பட அனுமதி அளிக்க கோரிக்கை விடுத்தோம். ஆட்சியரும் விரைவில் அதற்கான அறிவிப்பை வெளியிடுவதாக உறுதி அளித்துள்ளார்” என்றனர்.

இதையும் படிங்க:சென்னையில் 3 ஐம்பொன் சிலைகள் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details