மதுரை:தென்காசியில் காதல் திருமணம் செய்த கிருத்திகா பட்டேலை கடத்தியதாகக் காதலன் மாரியப்பன் வினித் தென்காசி, குற்றாலம் காவல் நிலையத்தில் கொடுத்தார். அவர் அளித்த புகாரின் பெயரில் அந்த பெண்ணின் அப்பா, அம்மா, உறவினர் என 12 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதையடுத்து தற்போது கிருத்திகா பட்டேலின் குடும்பத்தார் ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அப்போது உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை ஜாமீன் கோரியவர்களுக்கு ஜாமீன் வழங்கியும், முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தும் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் கிருத்திகா பட்டேலின் உறவினர்களான விஷால், கீர்த்தி பட்டேல் மற்றும் சண்முகராஜ் ஆகியோர் தங்களுக்கு முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மீண்டும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, "இந்த வழக்கில் தொடர்ந்து முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. ஆகையால் வழக்கின் தற்போது நிலவரங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஆகையால் கடத்தப்பட்டதாக கூறப்படும் இளம் பெண் கிருத்திகா பட்டியலை நேரில் வரவழைத்து விசாரிக்க வேண்டி உள்ளது. எனவே ஏப்ரல் 12 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இதையும் படிங்க: கோபியில் ரூ.2.8 கோடி கொள்ளை: 12 மணி நேரத்தில் பணத்தை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்த போலீசார்