தருமபுரியைச் சேர்ந்த பிரியங்கா, அவரது தாயார் மைனாவதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார்,
அதில் கூறியிருந்ததாவது, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் அக்டோபர் 12ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளோம். நீட் தேர்வில் 397 மதிப்பெண் பெற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்துவந்தேன்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள எனக்கும் எனது தாயாருக்கும் பிணை வழங்கக்கோரி கடந்த அக்டோபர் 23ஆம் தேதி தேனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.