தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்வி கட்டணத்தை வெளியிட அரசுக்கு ஒரு மாத கால அவகாசம்: நீதிமன்றம் - School fee

மதுரை: பள்ளிகளில் 2018-21ஆம் ஆண்டிற்கான கல்வி கட்டணத்தை வெளியிட அரசுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

By

Published : Jun 21, 2019, 9:37 PM IST

மதுரையைச் சேர்ந்த ஹக்கிம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ’கடந்த 2017-18ஆம் ஆண்டிற்கான, தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை, தமிழ்நாடு பள்ளிகள் கல்வி கட்டண நிர்ணயக் குழு நிர்ணயம் செய்தது. இதையடுத்து 2018-21ஆம் ஆண்டுகளுக்கான தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை தமிழ்நாடு பள்ளிகள் கல்வி கட்டண நிர்ணயக் குழு இதுவரை நிர்ணயிக்கவில்லை. இதனால் தமிழ்நாட்டில் இயங்கி வரும் 7,600 தனியார் பள்ளிகளில் பல பள்ளிகள் அதிக கல்விக் கட்டணம் வசூலித்து வருகின்றனர். ஆகையால், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தமிழ்நாடு பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழுவினை 2018-21ஆம் ஆண்டிற்கான கல்வி கட்டணத்தை வெளியிடுமாறு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்நிலையில், இன்று அந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, 2018-21ஆம் ஆண்டிற்கான நிர்ணயம் செய்யப்பட்ட கல்வி கட்டண விபரத்தை வெளியிட மூன்று மாத கால அவகாசம் வேண்டுமென தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கைவிடுத்தனர். அதனை ஏற்க மறுத்த, நீதிபதிகள் ஒரு மாத கால அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details