தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டாவில் முறைக்கேடு: நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு! - free housing land patta

1991-ல் வழங்கிய இலவச வீட்டுமனை பட்டாவை சட்டவிரோதமாக வாங்கிய நபர்களிடம் அபராதம் வசூலிக்க தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அரசு தரப்பின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

madurai
அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாவில் முறைக்கேடு

By

Published : Apr 12, 2023, 8:37 AM IST

மதுரை:திருச்சி கும்பக்குடி கிராமத்தில் கடந்த 1991-ல் அரசின் சார்பில் பலருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இதில் சிலர் மூன்றாம் நபர்களுக்கு விற்பனை செய்தனர். இலவச வீட்டுமனை பட்டாக்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக வந்த புகாரின் பேரில் கடந்த 1993-ல் இலவச வீட்டு மனை பட்டா ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஒதுக்கீடுதாரர்கள் தரப்பில் நில நிர்வாக ஆணையரிடம் அப்பீல் செய்யப்பட்டது.

இதில், சம்பந்தப்பட்ட நிலத்தில் பலர் கட்டிடங்களை கட்டியுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட நிலங்களை தற்போது வைத்துள்ளவர்களில் இலவச வீட்டு மனைப்பட்டா பெற தகுதியற்றவர்களாக கருதப்படுவர்களிடம், சந்தை மதிப்பில் இருமடங்காக பணம் வசூலித்துக் கொள்ளலாம் என நில நிர்வாக ஆணையர் கடந்த 2001-ல் உத்தரவிட்டார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட நிலத்திற்கான சந்தை மதிப்பில் இருமடங்கை செலுத்த தயாராக இருப்பதாக பலரும். மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்துள்ளனர். கடந்த 2009-ல் ஒரு சதுர அடிக்கு ரூ.73 என நிர்ணயம் செய்துள்ளனர். ஆனால் மேல் நடவடிக்கை இல்லை. எனவே, நில நிர்வாக ஆணையர் உத்தரவுப்படி இருமடங்கு விலையை செலுத்த தயாராக இருப்பதாகவும். தங்களிடம் பணத்தை வசூலித்து பட்டா வழங்குமாறு உத்தரவிடக் கோரி மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நிர்ணயம் செய்யப்பட்ட சந்தை மதிப்புடன் ஆண்டுக்கு 4 சதவீத வட்டி கணக்கிட்டு வசூலித்து சம்பத்தப்பட்டோருக்கு பட்டா வழங்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். இதை வழக்கை எதிர்த்து அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மேல் நடவடிக்கையும் எடுக்காமல் ஏற்பட்ட ஒட்டுமொத்த தாமதத்திற்கும் வருவாய்த் துறையினரே பொறுப்பு. நிலத்தின் மதிப்பீட்டை நிர்ணயம் செய்யுமாறு 2001-ல் உத்தரவாகியுள்ளது. இதைக் கூட 8 ஆண்டுகளுக்கு பிறகே விலை நிர்ணயம் செய்துள்ளனர். இதன் பிறகு பணத்தை வசூலிக்க மாவட்ட நிர்வாகம் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நிலத்தை வாங்கியவர்களிடம் வட்டியை வசூலிப்பது தொடர்பாக தனி நீதிபதி உத்தரவிட்டிருக்கக் கூடாது. மாறாக 20 வருடமாக தாமதம் செய்ததால் ஏற்பட்ட ஒட்டுமொத்த இழப்பையும் வருவாய்த் துறையினரிடம் வசூலிக்குமாறு உத்தரவிட்டிருக்க வேண்டும். எனவே, இந்த மேல் முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தனிநீதிபதி உத்தரவுப்படியான தொகையை சம்பந்தப்பட்டோரிடம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: பழங்குடியின தொழில்முனைவோருக்கு அடிச்சது ஜாக்பாட் - முதலமைச்சர் ஸ்டாலின் உடைத்த ரகசியம்!

ABOUT THE AUTHOR

...view details