மதுரைமாநகர் குயவர்பாளையத்தைச் சேர்ந்த தம்பதி நாகராஜன் (46) - லாவண்யா (34) ஆகிய இருவரும் நேற்றிரவு (மார்ச்.2) அவர்களது வீட்டில் தற்கொலை செய்து கொண்டனர்.
மதுரையில் தம்பதி தற்கொலை - பங்குச்சந்தை முதலீடு காரணமா? - பங்குச் சந்தை முதலீடு பிரச்சனை காரணமா
மதுரையைச் சேர்ந்த தம்பதி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த தெப்பக்குளம் காவல்துறையினர் கணவன், மனைவி இருவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பங்குச்சந்தை தொடர்பான முதலீட்டுப் பிரச்சனை காரணமாகத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் வீரர் தற்கொலை